×

காங்கோ நாட்டில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காங்கோ: காங்கோ நாட்டில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பெருவெள்ளத்தால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், சுமார் 43,750 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பலரும் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு காங்கோவில் பெருவெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில் நிலவரப்படி 400 எண்ணிக்கையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு கிவு மாகாணத்தின் கலேஹே பிரதேசம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் பல சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பலரது சடலங்கள் கிவு ஏரியில் மிதந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, உறுதிப்படுத்தப்பட்ட இறந்தவர்களின் எண்ணிக்கை 394 என கூறப்படுகிறது, ஆனால் தேடுதல் தொடர்வதால் இது தற்காலிக எண்ணிக்கை மட்டுமே எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

 

The post காங்கோ நாட்டில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Congo ,Eastern Congo ,Dinakaran ,
× RELATED காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை: சுகாதார அவசர நிலை பிரகடனம்